Wednesday, April 2, 2014

வாசிப்பு பழக்கம்

நாஞ்சில் நாடனின் சிறுகதை - 'பழி காப்பு அங்கதம்' இன்று படித்தேன்.

அப்பட்டமாக மகாராஜபுரம் சந்தானத்தைப் பற்றிதான் எழுதியுள்ளது புரிகிறது.

இதே கதையை ராஜசேகர ரெட்டியை வைத்து அரசியல் பின் புலமாக எழுத முடியும் என்று தோன்றுகிறது.

சாதாரண கதை, நல்ல திறமையான எழுத்தின் காரணமாக, அற்புதமாக வந்துள்ளது.

'வளைகள் எலிகளுக்கானவை' மிக நன்றாக வந்துள்ளது.

புத்தகம் குறித்த என்னுடைய எண்ணங்களை அவருக்கே தனியாக அனுப்பி விடுவதுதான் உத்தமமமான காரியம்.

தமிழில், தமிழ் நாட்டை விட்டு வெளியே நடப்பதை யார் எழுதினாலும் அங்கே சுஜாதாவின் ஞாபகமும் கொஞ்சம் வருவதை தவிர்க்கவே முடியவில்லை.

ஒரு வேளை என்னுடைய வாசிப்பு பழக்கம் இருக்கலாம், அல்லது சுஜாதாவை தவிர்த்து வெகு சிலருக்கே தமிழ் நாட்டுக்கு வெளியே நடை பெறுவதையும் கதைக் களமாக வைத்து எழுத முடிந்திருக்கிறது.

தமிழின் மிகப் பெரிய சாபமாக, கதையே இல்லாமல் வெறுமே தமது பிரதேசம் சார்ந்த வார்த்தைகளையும், இடங்களையும் குறிப்பித்து எழுதுவது நல்ல இலக்கியமாக கருதப் படுவதுதான்.

இந்த எழுத்துக்கள் எல்லாம் ஒரு வார்த்தைச் சித்திரமாகவே தோன்றுகிறது. தவிர இப்படிபட்ட சிறுகதைகளில் ஒரு கதா பாத்திரம் அல்லது சம்பவம் மட்டுமே மனதில் நிற்கிறது.

அதற்கும் மேலே சிறுகதைகள் வருவது, தங்களை அறியாமல் தான் எழுத்தாளர்கள் படைத்து விடுகிறார்கள் என்று தோன்றுகிறது.

தீவிரமான வாசிப்புக்குள் என்னை மீண்டும் ஈடுபடுத்திக் கொள்ளும் பொது இப்படிப்பட்ட பார்வைகள் தவிர்க்க முடியாதவை.

மேலும் நிறைய வரும். 

No comments: